1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2020 (17:21 IST)

மே 2020 - எண்ணியல் பலன்கள்: 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு....

 
அனைவரையும் அனைத்து இடத்திலும் அனைத்து வேளைகளிலும் அனுசரித்து போகும் ஒன்றாம் எண் அன்பர்களே, எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும்.  உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் தவறை உணர்ந்து உங்களிடம் வந்து சரணடைவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவீர்கள். சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்ததை விட அதிகமாக கிடைக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். அலைச்சலும் வேலைப் பளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும். அதே வேளையில் நீங்கள் சென்ற இடமெல்லாம் அனுகூலம் ஏற்படும்.  சேமிப்புகள் அதிகரிக்கும். நல்ல வருமானத்தைக் காண்பர். படிப்படியாக லாபம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். புதிய தொழில் தொடங்குவற்குண்டான வேலைகளுக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும்.
 
பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் தக்ஷிணாமுர்த்திக்கு நெய் விளக்கு ஏற்றி வலம் வரவும்.