திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Updated : வியாழன், 28 பிப்ரவரி 2019 (15:22 IST)

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 9, 18, 27

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

விவேகத்துடன் செயல் பட்டு தனது செயலில் வெற்றி காணும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி  இருக்கும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

தொழில்  வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேலிடத்திலிருந்து வரும் செய்திகள் நல்ல செய்திகளாக வரும்.

பெண்களுக்கு  சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.  பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள். ஆசிரியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பரிகாரம்: குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சனை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.