1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (20:51 IST)

ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். 


 

 
மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். பாகப்பிரிவினை சுமூகமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். அரசியலில் செல்வாக்குக் கூடும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். 
 
இருவரும் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். புது வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். ஆனால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். 
 
அரசியல்வாதிகளே! எதிர்கட்சியினரை உங்களுடைய காரசாரமான பேச்சால் அசர வைப்பீர்கள். 
 
கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். வேற்றுமொழிப் பேசுபவர்களால் புது ஒப்பந்தங்கள் வரும். சிலர் சொந்தமாக கடை வாங்க முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிப் பெறுவீர்கள். 
 
கலைத்துறையினரே! உங்களின் கடுமையான உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். எதிர்பார்ப்புகளில் சில நிறைவேறும் மாதமிது.             
 
அதிஷ்ட தேதிகள்: 6, 4, 5, 26
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், பிஸ்தாபச்சை
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், சனி