Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31


Abimukatheesh| Last Modified வியாழன், 1 ஜூன் 2017 (20:44 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு வேலைச்சுமை அதிகமாகும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். 

 

 
அடிவயிற்றில் வலி, அலர்ஜி, இன்பெக்ஷன், இரத்த அழுத்தம் வரக்கூடும். அரசு காரியங்கள் தாமதமாகும். என்றாலும் ஓரளவு மனநிம்மதி உண்டாகும். அழகு, அறிவுக் கூடும். தள்ளிப் போன விஷயங்களை விரைந்து முடிப்பீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கறாராகப் பேசி பல காரியங்களை முடிப்பீர்கள். 
 
சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். வீடு, மனை வாங்குவது விற்பது சுலபமாக முடியும். சகோதர ஒற்றுமை பலப்படும். மாதத்தின் மையப்பகுதியில் கொஞ்சம் மறதி, மந்தம், தூக்கமின்மை, விரக்தி வந்துச் செல்லும். எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையாப்பமிட்டு வைக்க வேண்டாம். 
 
அரசியல்வாதிகளே! தகுந்த ஆதாரமின்றி எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். போட்டிகள் அதிகமாகும். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் செல்வார்கள். வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வந்துப் போகும். உத்யோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். 
 
கலைத்துறையினரே! புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 4, 6, 15, 22
அதிஷ்ட எண்கள்: 5, 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, மஞ்சள் 
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்


இதில் மேலும் படிக்கவும் :