1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (20:38 IST)

ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். 


 
முன்கோபம், வாக்குவாதங்கள், அலுப்பு, சலிப்பு, வெறுப்பு நீங்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். அரசால் ஆதாயம் உண்டு. ஆனால் காது, மூக்கு, பல் வலி வரக்கூடும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். ஒரு விஷயத்தை செய்வதென்றால் அது முடியாவிட்டால் அடுத்தது என்ன செய்யலாம் என்று முன்னரே யோசித்து செய்வது நல்லது.

மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து மனதிலே ஒரு தெளிவு, முகமலர்ச்சி, அழகு, ஆற்றல், உற்சாகம் அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். பழுதான டி. வி. , ப்ரிட்ஜ், ஓவனை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். 
 
உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சகோதரங்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். 
 
கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். 
 
அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும். வியாபாரத்தில் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் தவறைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மட்டத்திற்கு செல்வாக்கு உயரும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். 
 
கலைத்துறையினரே! நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நல்ல வாய்ப்பு வரும். அனுபவ அறிவை பயன்படுத்தி முன்னேறும் மாதமிது.   
 
அதிஷ்ட தேதிகள்: 3, 12, 10, 21, 27
அதிஷ்ட எண்கள்: 2, 4
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ப்ரவுன்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்