ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28


Abimukatheesh| Last Modified வியாழன், 1 ஜூன் 2017 (20:31 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

 


தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். குடும்ப வருமானம் உயரும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் பூர்வீக சொத்தை விரிவுப்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.

பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். ஷேர் மூலம் லாபம் வரும். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரைக்குறையாக நின்ற கட்டிட வேலைகளை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிட்டும். தாய்வழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். என்றாலும் தாயாருக்கு முதுகு, மூட்டு வலி வந்துப் போகும்.

உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். வழக்கை நினைத்து அவ்வபோது தூக்கம் குறையும். கன்னிப் பெண்களே! காதல் வேறு, நட்பு வேறு என்பதை உணருவீர்கள். புதிய நண்பர்களை நம்பி பழைய நட்பை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

அரசியல்வாதிகளே! கட்சியில் செல்வாக்குக் கூடும். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ், உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சின்ன சின்ன அலைகழிப்புகள் இருக்கும். மேலதிகாரியின் குறை, நிறைகளையெல்லாம் சுட்டிக் காட்ட வேண்டாம்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். கடின உழைப்பால் இலக்கை எட்டும் மாதமிது.          
 
அதிஷ்ட தேதிகள்: 1, 3, 5, 10, 30
அதிஷ்ட எண்கள்: 3, 7
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ரோஸ்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

webdunia

இதில் மேலும் படிக்கவும் :