ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8,17,26
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதையும் திட்டமிட்டு செய்வீகள். புதிய நட்பு, ஆட்சியாளர்களின் நட்பு எல்லாம் கிட்டும். வற்றியப் பணப்பை நிரம்பும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.
நெடுநாட்களாக இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பெற்றோரின் ஆதரவு உண்டு. பிரபலங்களின் உதவி கிடைக்கும். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் இனந்தெரியாத கவலைகள், எதிலும் ஒருவித படபடப்பு, தயக்கம் வந்துச் செல்லும்.
சொந்தம்-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சியை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெற்றிக் கனியை பறிக்கும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 5, 8, 14, 15, 26
அதிஷ்ட எண்கள்: 4, 6
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், சனி