செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 31 மே 2016 (18:56 IST)

ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4,13,22,31

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாததத்தில் புது தெம்பு பிறக்கும். மூத்த சகோதரங்களால் பண உதவிகள் கிடைக்கும். அரசு காரியங்களில் வெற்றி கிட்டும். சொத்து சேரும். பிள்ளைகளளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஆனால் காலில் அடிப்படும். யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். உறவினர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். 
 
எதிர்பாராத சந்திப்பு நிகழும். என்றாலும் வீண் விரையம், ஏமாற்றம், திடீர் பயணம், இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வந்துப் போகும். ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. பழைய நல்ல சம்பவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும் இருந்தாலும் மகிழ்ச்சி உண்டு. வழக்கு சாதகமாகும். 
 
அரசியல்வாதிகளே! தொகுதி மக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். 
 
கன்னிப் பெண்களே! நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை இப்பொழுது உணருவீர்கள். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். 
 
கலைத்துறையினரே! உங்களின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும். இழுபறி நிலைமாறி ஏற்றம் பெறும் மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 4, 6, 15, 22, 24
அதிஷ்ட எண்கள்: 2, 7
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு 
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்