ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3,12,21,30
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் அழகு, இளமை கூடும். புது வேலை கிடைக்கும். கௌரவம் கூடும். குடும்பத்தாருடன் கொஞ்சம் நேரம் கூட உட்கார்ந்து பேச முடியவில்லையே என நினைத்தீர்களே! இப்பொழுது அவர்களுக்கென நேரத்தை செலவிடுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உங்கள் மகளுக்கு எதிர்பார்த்தபடி வரன் அமையும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். என்றாலும் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து விடுவது நல்லது. கறாராக பேசுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் தியாக உணர்வை புரிந்து கொள்வார்கள்.
உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வேற்றுமொழிக்காரர்களால் ஆதயமடைவீர்கள். அரசு வேலைகள் உடனே முடியும். மாதத்தின் பிற்பகுதியில் ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் திடீர் பயணங்களும், செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும்.
அரசியல்வாதிகளே! தொகுதி மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள்.
கன்னிப் பெண்களே! பள்ளிக் கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, எண்டர்பிரைஸ் வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் மனம் விட்டு பேசுவார்கள். நீங்களும் பல ஆலோசனைகள் தருவீர்கள்.
கலைத்துறையினரே! பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் வரும். மாறுபட்ட பாதையில் சென்று சாதிக்கும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 3, 12, 15, 27
அதிஷ்ட எண்கள்: 6, 9
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்