செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 31 மே 2016 (18:51 IST)

ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2,11,20,29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். 
 
எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். ஆனால் கோபம் அதகரிக்கும். தலைசுற்றல், வயிற்றுவலி, கை, கால் வலி வந்துப் போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்தை விரிவுப்படுத்துவீர்கள். 
 
பிரபலங்களின் சந்திப்பு நிகழும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழுதாகி கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வேற்றுமதத்தினரால் நன்மையுண்டு. அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். 
 
அரசியல்வாதிகளே! கட்சி தலைமையால் அலைக்கழிக்கப்படுவீர்கள். 
 
கன்னிப் பெண்களே! நிஜம் எது நிழல் எது என்பதை உணர்வீர்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். 
 
கலைத்துறையினரே! சின்ன சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். விவேகமான முடிவுகளால் முன்னேறும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 2, 7, 6, 15, 16
அதிஷ்ட எண்கள்: 1, 9
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு 
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்