1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 30 ஜூன் 2017 (21:02 IST)

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.


 


கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த மோதல்கள் விலகம். பழைய சொந்த&பந்தங்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கௌரவப் பதவிகள் கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. இளைய சகோதரருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும்.

வாகனம் வாங்குவீர்கள். வீடு மாறுவீர்கள். லோன் கிடைக்கும். குழந்தை பாக்யம் உண்டாகும். தந்தைவழியில் மகிழ்ச்சி தங்கும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். வேற்றுமதத்தினர், மொழியினர்கள் உதவுவார்கள். பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். 
 
அரசியல்வாதிகளே! தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். 
 
கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. புதுக் கிளைத் தொடங்குவீர்கள். அனுபவமிகுந்த பணியாட்கள் அமைவார்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். 
 
கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தொட்டதெல்லாம் துலங்கும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 3, 1, 9, 10, 27
அதிஷ்ட எண்கள்: 3, 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி