ஜுலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் நினைத்தது நிறைவேறும். அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் என அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் மணப்பெண் அமைவாள். கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.
சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிதாக ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து தந்தையுடன் கருத்து மோதல்கள், அவருக்கு உடல் நிலை பாதிப்பு வந்துப் போகும்.
வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமொழி, நாட்டினாரால் திடீர் திருப்பம் உண்டாகும். அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள்.
கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் மனம் விட்டு பேசுவார்கள். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். கலைத்துறையினரே! கௌரவிக்கப்படுவீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 8, 17, 23, 24, 26
அதிஷ்ட எண்கள்: 1, 8
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், பிஸ்தா பச்சை
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி