ஜுலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதையும் தாங்கும் மனவலிமைக் கிட்டும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மாதத்தின் மையப் பகுதியில் வீண் விமர்சனங்களுக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்புகள் புதுத் தெம்பை தரும். வெளியூர் பயணங்களால் திடீர் திருப்பம் உண்டாகும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். பெற்றோரின் அறிவரையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் நம்பிக்கைக்குறியவரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வேலையாட்களின் ஆதரவு உண்டு. உத்யோகத்தில் வீண் டென்ஷன் அதிகரிக்கும். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். போராடி இலக்கை எட்டும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 6, 8, 15, 17
அதிஷ்ட எண்கள்: 2, 9
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்