ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2016 (15:33 IST)

ஜுலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் இதமான பேச்சு, மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர்கள். எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும்.

அரசாங்க அதிகாரிகள் பக்க பலமாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதியுண்டு. மனைவிவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
 
பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். என்றாலும் மன உளைச்சல், காரியத் தடைகள் வரக்கூடும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண் காணிப்பது நல்லது. மகளின் கல்யாணத்திற்காக கொஞ்சம் அலைய வேண்டி வரும். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து புகழ், கௌரவம் கூடும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
 
கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பற்று வரவு உயரும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். ஒருபடி முன்னேறும் மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 5, 1, 14, 15, 26
அதிஷ்ட எண்கள்: 5, 7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஆரஞ்சு 
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி