ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2016 (15:15 IST)

ஜுலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் எதிர்பார்த்த காரியங்களை தடையின்றி முடியும். வீடு கட்ட லோன் கிடைக்கும். தாயாருக்கு இருந்த மூட்டு வலி, முழங்கால் வலியெல்லாம் நீங்கும். பணவரவு உண்டு.

பழைய சொத்துப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வெடிக்கும். இளைய சகோதரரால் ஆதாயம் உண்டு.
 
புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வழக்கு சாதகமாகும். அரசால் அனுகூலம் உண்டு. தள்ளிப் போன கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். பால்ய சினேகிதர்களின் சந்திப்பு நிகழும். ஆனால் முன்கோபம், வீண் அலைச்சல் வரும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். அரசியல்வாதிகளே! தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிக்கத்தான் செய்வார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத்துறையினரே! உங்களின் திறமைகள் வெளிப்படும். தொலை நோக்குச் சிந்தனையால் சாதிக்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 2, 6, 11, 16, 25
அதிஷ்ட எண்கள்: 3, 5
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெளிர் நீலம் 
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்