ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2016 (15:13 IST)

ஜுலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் புது வழியில் சில முயற்சிகள் செய்வீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பால் உற்சாகம் அடைவீர்கள். எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் கைக்கு வரும். வீட்டில் அமைதி நிலவும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. மகனின் கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும்.
 
ஆன்மீக பயணங்கள் நல்ல விதத்தில் அமையும். பூர்வீக சொத்தில் சில மாற்றம் செய்வீர்கள். என்றாலும் தொண்டை வலி, காய்ச்சல், சளித் தொந்தரவு, சகோதர வகையில் மனத்தாங்கல் வரக்கூடும். மனைவியின் உடல் நலத்திலும் அக்கறை காட்டுங்கள். சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரக்கூடும். ஆனால் மாதத்தின் மையப் பகுதியிலிருந்து அரசாங்க காரியங்களில் இருந்த தடுமாற்றம் ஓயும். திட்டமிடாத செலவுகளையும் சமாளிக்க வேண்டி வரும்.
 
கன்னிப் பெண்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் உண்டு. ஆனால் தடாலடியாக பெரிய முதலீடுகளை போடாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். உயரதிகாரி பாராட்டும்படியாக சில விஷயங்களை இழுத்துப் போட்டுச் செய்வீர்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். எதார்த்தமான பேச்சால் சாதிக்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 1, 9, 12, 10, 21
அதிஷ்ட எண்கள்: 2, 8
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, பச்சை
அதிஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி