ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

Numerology
Last Modified வியாழன், 12 ஜூலை 2018 (13:09 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் நியாயமான திட்டங்களுக்கு ஆதரவு அளித்து அடுத்தவர் மதிப்பை பெறும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள்.


தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.
 
கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும்.
 
அரசியல்துறையினருக்கு எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும்.
 
பெண்களுக்கு சேமிக்கும் எண்ணம் அதிகரிக்கும்.
 
மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
 
சிறப்பான கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
அனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7
பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.இதில் மேலும் படிக்கவும் :