ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள்.
பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். டி.வி, ஃப்ரிஜ் புதிதாக வாங்குவீர்கள். தூரத்து சொந்தங்களால் ஆதாயமுண்டு.
பேச்சில் கம்பீரம் பிறக்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். விலகியிருந்த சகோதரங்கள் விரும்பி வந்து பேசுவார்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து சோர்வு, களைப்பு, நண்பர்களுடன் வாக்குவாதம் வந்துப் போகும். குருபகவான் வலுவாக இருப்பதால் வீட்டில் தள்ளிப் போன சுப காரியங்கள் ஏற்பாடாகும். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.
அரசியல்வாதிகளே! பொது விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள்.
கன்னிப் பெண்களே! கல்யாணத் தடைகள் நீங்கி நல்ல இடத்தில் கல்யாணம் முடியும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். அவ்வப்போது விடுமுறையில் சென்ற வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். எப்பொழுதும் எதிரியாக நினைத்த சக ஊழியர்கள் வலிய வந்து நட்புறவாடுவார்கள்.
கலைத்துறையினர்களே! கடின உழைப்பால் சாதித்துக் காட்டுவீர்கள். தொலை நோக்குச் சிந்தனையால் சாதிக்கும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 8, 15, 23, 24, 26
அதிஷ்ட எண்கள்: 3, 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்