1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 31 டிசம்பர் 2016 (16:35 IST)

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு,  இந்த மாதத்தில் சவால்களில் வெற்றிப் பெறுவீர்கள்.

 
ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த பணம் வரும். கணவன்&மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கு புது வேலை கிடைக்கும். வழக்கு சாதகமாகும். புது வீடு கட்ட லோன் கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். உடன்பிறந்தவர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். வீடு,  மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். சொந்த&பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். 
 
நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். என்றாலும் வாகன விபத்து,  வீண் டென்ஷன்,  மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும்,  அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். மாதத்தின் பிற்பகுதியில் கௌரவப் பதவிகள் தேடி வரும். மகான்கள்,  சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். 
 
அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். 
 
கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். 
 
கலைத்துறையினர்களே! திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பழைய பிரச்சனைகளிலிருந்து விடுபடும் மாதமிது.    
 
அதிஷ்ட தேதிகள்: 7, 2, 6, 11, 20, 25
அதிஷ்ட எண்கள்: 1, 4
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், மெரூண்
அதிஷ்ட கிழமைகள்: வெள்ளி, ஞாயிறு