1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 31 டிசம்பர் 2016 (16:31 IST)

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு,  இந்த மாதத்தில் கணவன்&மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும்.

 
மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளியூரிலிருந்து உறவினர்கள்,  நண்பர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். 
 
என்றாலும் பெற்றோரின் உடல் நலம் பாதிக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. மனைவிக்கு அறுவை சிகிச்சை,  மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். சகோதரர் கோபித்துக் கொள்வார். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கௌரவிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தினர்,  மொழியினரால் ஆதாயமடைவீர்கள். 
 
அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். 
 
கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். தடைபட்ட கல்வியை தொடருவீர்கள். வியாபாரத்தில் உங்கள் ரசனைக்கேற்றபடி கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் குழப்பம் நீங்கும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். 
 
கலைத்துறையினர்களே! உங்களை சிலர் விமர்சித்துப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். தன் பலம் பலவீனத்தை உணரும் மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 6, 4, 8, 17, 26
அதிஷ்ட எண்கள்: 5, 8
அதிஷ்ட நிறங்கள்: கிரே, க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்