திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (20:33 IST)

பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.

வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பேசாமல் இருந்த உறவினர் வலிய வந்துப் பேசுவார். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அவ்வப்போது தூக்கமின்மை, திடீர் பயணங்கள் வந்து செல்லும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.

கன்னிப் பெண்களே! உண்மையான காதல் எது என்பதை உணருவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! தலைமை உங்களை முழுமையாக ஆதரிக்கும். கட்சியினரும் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள்.

விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உத்யோகத்தில் உங்களின் பரந்த மனசை மூத்த அதிகாரி புரிந்துக் கொண்டு உதவுவார். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர்களே! பழைய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். நாவான்மையால் வெல்லும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 9, 3, 6, 24
அதிஷ்ட எண்கள்: 3, 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்