திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (20:32 IST)

பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் கூடாப் பழக்கம் விலகும். அடகு வைத்திருந்த நகையை மீட்பீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள்.

பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். மனைவியுடன் கருத்து மோதல்கள், அவருக்கு தலைச்சுற்றல், கர்ப்ப பை வலி வந்து விலகும். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் உண்டாகும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அரசியல்வாதிகளே! கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தொகுதி மக்கள் தான் உங்களுடைய எஜமானர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள்.

வேலையாட்கள், பங்குதாரர்களால் இருந்த பிரச்னைகள் நீங்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். வெளுத்ததெல்லாம் பாலில்லை என்பதை உணரும் மாதமிது.    

அதிஷ்ட தேதிகள்: 8, 14, 15, 23
அதிஷ்ட எண்கள்: 2, 4
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: வியாழன், சனி