திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (20:30 IST)

பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் கனத்த மனசு லேசாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். அழகு, இளமைக் கூடும்.

வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். புது வேலைக் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள்.

அவ்வப்போது மனைவியுடன் வாக்குவாதம் வரக்கூடும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. எதிர்பார்த்த வகையில் உதவிகள் உண்டு. தடைப்பட்ட வேலைகள் முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் இருந்த பிரச்னைகள் ஓயும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். அரசியல்வாதிகளே! மக்கள் செல்வாக்கு கூடும். எதிர்கட்சியினரையும் தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். கமிஷன் மூலம் பணம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். விட்டுக் கொடுப்பதால் வெற்றி பெறும் மாதமிது.  

அதிஷ்ட தேதிகள்: 7, 2, 6, 11
அதிஷ்ட எண்கள்: 5, 9
அதிஷ்ட நிறங்கள்: சிவப்பு, ஊதா
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்