திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (20:10 IST)

பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். புது வேலை அமையும்.

குடும்பத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். சகோதரர் பாசமழைப் பொழிவார். பிள்ளைகளிடம் நல்ல மாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்தால் அலைச்சல், விரையம் வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

வி.ஐ.பிகளின் அறிமுகம் கிட்டும். வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயம் உண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் அனுகூலம் உண்டு. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்துங்கள். அரசியல்வாதிகளே! அநாவசியமாக ஆதாரமின்றி எதிர்கட்சியினரை தாக்கிப் பேச வேண்டாம்.

கன்னிப்பெண்களே! தாயாருக்கு ஆதரவாக இருங்கள். விளம்பரத்தை கண்டு ஏமாந்துவிடாதீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். சமய சந்தர்ப்பம் அறிந்து காய் நகர்த்தும் மாதமிது.                                 

அதிஷ்ட தேதிகள்: 4, 1, 6, 17
அதிஷ்ட எண்கள்: 2, 8
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், சில்வர் கிரே
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி