திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 31 ஜனவரி 2017 (20:07 IST)

பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவு ஓயும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள்.

கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். பழைய சொந்தங்களைச் சந்திப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். பழுதான மின்சார, மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள்.

மனைவி வழி உறவினர்கள் உதவுவார்கள். சகோதர வகையிலும் நிம்மதி உண்டு. ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும். அவ்வப்போது வீண் செலவு, மனயிறுக்கம், தலைச்சுற்றல், முன்கோபம் வந்து செல்லும். தாயார் ஆதரித்துப் பேசுவார். அரசியல்வாதிகளே! மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

கன்னிப் பெண்களே! செல்போன், லேப் டாப் புதிதாக வாங்குவீர்கள்.வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். கணிசமாக லாபம் உயரும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. பங்குதாரர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தொலை நோக்குச் சிந்தனையால் சாதிக்கும் மாதமிது.    

அதிஷ்ட தேதிகள்: 2, 16, 15, 25
அதிஷ்ட எண்கள்: 6, 8
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு