திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (19:32 IST)

பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.

வாகன வசதிப் பெருகும். வீடு, மனை அமையும். நிர்வாத்திறமைக் கூடும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சொத்து சம்பந்தப் பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கோவில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். அவ்வப்போது எதிர்மறை சிந்தனை, ஏமாற்றம் வந்து நீங்கும். உடல் நலம் பாதிக்கும். அரசியல்வாதிகளே! எதிர்கட்சியினரை கேள்வி மேல் கேள்வி கேட்டு துலைத் தெடுப்பீர்கள்.

கன்னிப் பெண்ளே! கன்னிப் பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்தி புதிதாக கொள்முதல் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பங்குதாரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடி வந்து நீங்கும். மேலதிகாரி உதவுவார். கலைத்துறையினர்களே! உங்களின் புகழ், கௌரவம் உயரும். சின்ன சினன் ஆசைகள் நிறைவேறும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 1, 3, 5, 10
அதிஷ்ட எண்கள்: 1, 9
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வெளிர் நீலம்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்