புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Updated : வியாழன், 31 ஜனவரி 2019 (16:33 IST)

பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு


எதிலும் தன்னிச்சையாக செயல்படவேண்டும் என்ற எண்ணங்களைக் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். பணவரத்து எதிர்பார்த்ததை போல இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். கலைத்துறையினருக்கு எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று சிவன் கோயிலுக்கு சென்று சிவனையும் நவகிரகத்தில் சூரியனையும் தீபம் ஏற்றி வழி படுவது எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.