டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் புதிய முயற்சிகள் நிறைவேறும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
ஷேர் மார்க்கெட்டில் இழந்ததை பிடிப்பீர்கள். தேர்வில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. பணவரவு அதிகரிக்கும். தந்தையின் உடல் நலம் சீராகும். வீடு மாறுவீர்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும்.
சகோதரங்களால் நன்மை உண்டு. வீடு, மனை சேரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். ஆனால் கொஞ்சம் அலைச்சலும், செலவுகளும், ஏமாற்றங்களும் வந்துப் போகும். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளே! பொது விழாக்களுக்கு தலைமைத் தாங்குவீர்கள்.
கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள்-. வியாபாரத்தில் விட்டதை பிடிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வரும். கலைத்துறையினர்களே! வதந்திகள் வரக்கூடும். செல்வாக்கு, கௌரவம் ஒருபடி உயரும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 9, 6, 10, 18, 21
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி