டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதத்தில் தடைப்பட்ட விஷயங்கள் உடனே முடியும். பிரபலங்கள் பாராட்டுவார்கள். வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள்.
புது வேலைக் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மகளுக்கு தீவிரமாக வரன் தேடுவீர்கள். மகனுக்கு இருந்த கூடா நட்பு விலகும். சகோதர வகையில் பயனடைவீர்கள். சொத்து பிரச்னை தீரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மாதத்தின் முற்பகுதியில் வேலைச்சுமை, மனக்குழப்பம், உறவினர்கள், நண்பர்களுடன் வாக்குவாதம் வந்துப் போகும்.
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மையப்பகுதியிலிருந்து சுபச் செலவுகள் அதிகரிக்கும். திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வீடு மாறுவது, கூடுதல் அறைக் கட்டுவது நல்ல விதத்தில் முடியும். ஆனால் முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை விவாதிக்க வேண்டாம். தூக்கமின்மை வந்து விலகும். அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும்.
கன்னிப் பெண்களே! காதல் கைகூடும். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கலைத்துறையினர்களே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமால் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். அதிரடி செயல்பாடுகளால் முன்னேறும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 6, 13, 14, 15, 24
அதிஷ்ட எண்கள்: 1, 4
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிஸ்தா பச்சை
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்