டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சாதுர்யமாகப் பேசுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள்.
வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். பணவரவு அதிகரிக்கும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணி முழுமையடையும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு.
பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மாதத்தின் பிற்பகுதியிலிருந்து செலவு, வீண் டென்ஷன் வந்துப் போகும். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். கை, கால் வலி வந்துப் போகும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தில் பாராட்டப்படுவீர்கள்.
கன்னிப் பெண்களே! அமைதியாக இருந்து சாதிப்பீர்கள். வியாபாரத்தில் லாபத்தை பெருக்க புது விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைபார்கள். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விவாதம், போட்டிகளில் வெற்றி பெறும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 5, 8, 14, 23, 24
அதிஷ்ட எண்கள்: 5, 9
அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, கிரே
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி