1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2016 (16:25 IST)

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதம் திடீர் யோகம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும்.

பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம், காதுகுத்தி என வீடு களைக்கட்டும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மூத்த சகோதரர் ஒத்தாசையாக இருப்பார். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

வீடு வாங்குவது கட்டுவது சாதகமாகும். வாகனம் வாங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை குறையும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். அரசியல்வாதிகளே! மேலிடத்திற்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். வேலையாட்கள், பங்குதாரர்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சமயோஜித புத்தியால் சாதிக்கும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 3, 9, 12, 21, 27
அதிஷ்ட எண்கள்: 2, 5
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், சனி