1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2015 (18:04 IST)

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு, இந்த மாதத்தில் எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு.

எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புது வேலை அமையும். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். சகோதரங்களும் பக்கபலமாக இருப்பார்கள்.
 
தந்தை வழியிலும் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ஆனால் மனைவியில் ஆரோக்யத்தில் அக்கறைக் காட்டுங்கள். உங்கள் தன்மானத்தை பாதிக்குமளவிற்கு சில சொந்த-பந்தங்கள் நடந்துக் கொள்வார்கள். பேசுவார்கள்.
 
மனைவி ஏதேனும் உங்கள் தவறுகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். கோபப்படாதீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். இரு சக்கர வாகனத்தை இயக்கும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். பெற்றோரை தவறாகப் புரிந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் பெறுவீர்கள். பழைய பாக்கிகளையும் இங்கிதமாகப் பேசி வசூல் செய்வீர்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். பாராட்டப்படுவீர்கள். இடமாற்றமும் கிடைக்கும். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனங்களில் புது வேலை வாய்ப்பு தேடி வரும்.
 
கலைத்துறையினர்களே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள். எதிர்நீச்சலில் வெற்றி பெறும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 9, 10, 18, 24, 27  
அதிஷ்ட எண்கள்: 2, 8
அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, நீலம்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்