1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2015 (18:09 IST)

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.

எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். அழகு, இளமைக் கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மனைவிவழி உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.
 
ஹிந்தி, தெலுங்கு மொழிப் பேசுபவர்களால் நல்லது நடக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சொந்த-பந்தங்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். வாகனத்தில் நெடுநாட்களாக இருந்து வந்த பழுதை சரி செய்வீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் சில நேரங்களில் படபடப்பாக இருப்பீர்கள்.
 
மற்றவர்களுக்காக பரிந்துப் பேசப் போய் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். பல், காது வலி வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். ஆனால் எத்தனைப் பிரச்னை வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கும் சக்தி உண்டாகும். வழக்கில் திருப்பம் ஏற்படும். பணப்புழக்கம் இருக்கும் ஆனால் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும்.
 
கன்னிப் பெண்களே! வருங்காலம் குறித்து சில திட்டங்களை தீட்டுவீர்கள். வியாபாரத்தில் மாற்றுவழியை கையாளுவீர்கள். ரசாயனம், மருந்து, உணவு வகைகளால் லாபம் வரக்கூடும். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். புது சலுகைகளும் கிடைக்கும்.
 
கலைத்துறையினர்களே! பழைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். மாற்றுப் பாதையில் சென்று புதிய தீர்வுகள் தேடும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 5, 6, 17, 23, 26   
அதிஷ்ட எண்கள்: 7, 9
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்