வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 30 நவம்பர் 2016 (20:13 IST)

டிசம்பர் மாத ராசிப் பலன்கள் - கன்னி

மற்றவர்களின் மனம்கோணாமல் பேசும் நீங்கள் கைமாறு கருதாமல் உதவுபவர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதையும் திட்டமிட்டு செய்வீர்கள்.

இடம், பொருள், ஏவலறிந்து பேசும் வித்தையைக் கற்றுக் கொள்வீர்கள். அனுபவ அறிவால் முன்னேற்றம் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புது ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். தந்தைவழியில் உதவிகள் உண்டு. சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் அரசால் அனுகூலம் உண்டு.

அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்குகளும் சாதகமாகும். அடிமனதில் தைரியம் பிறக்கும். பழைய நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உங்கள் ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

ஜென்ம குரு நடைபெறுவதால் திடீரென்று அறிமுகமாகுபவர்களை அதிகம் நம்பாதீர்கள். கை, கால் வலிக்கும். குதிக்காலில் வலி அதிகமாகும். சின்ன சின்ன விபத்துகளும் வரும். கணவன்-மனைவிக்குள் இருக்கும் அந்தரங்க விஷயங்களையோ, கருத்து மோதல்களையோ வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

சனிபகவான் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். ஷேர் பணம் தரும். 5-ந் தேதி வரை செவ்வாய் சாதகமாக இல்லாததால் பிள்ளைகளால் டென்ஷன், வீடு, மனை வாங்குவதில் சிக்கல்கள் வந்துச் செல்லும். ஆனால் 6-ந் தேதி முதல் செவ்வாய் 6-ம் வீட்டில் அமர்வதால் சகோதர வகையில் இருந்த மோதல்கள், சொத்துப் பிரச்னைகளெல்லாம் நீங்கும்.

கன்னிப் பெண்களே! நீண்ட நாள் கனவு நனவாகும். போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். வேலைக் கிடைக்கும். கல்யாணம் கூடி வரும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்ய பண உதவிகள் கிடைக்கும். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். வேற்றுமதம், வேற்று மாநிலத்தைச் சேர்ந்த வேலையாட்களால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். சட்ட விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகள் பலராலும் பேசப்படும். புது வாய்ப்புகளும் தேடி வரும். பரபரப்பாக காணப்பட்டாலும் சவால்களில் வெற்றி பெறும் மாதமிது.