ஆகஸ்டு மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும்.
முன்கோபம், வாக்குவாதங்கள், அலுப்பு, சலிப்பு, வெறுப்பு நீங்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். அரசால் ஆதாயம் உண்டு. ஆனால் கண், பல் வலி வரக்கூடும். சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். ஒரு விஷயத்தை செய்வதென்றால் அது முடியாவிட்டால் அடுத்தது என்ன செய்யலாம் என்று முன்னரே யோசித்து செய்வது நல்லது.
மாதத்தின் மையப்பகுதி முதல் மனதிலே ஒரு தெளிவு, முகமலர்ச்சி, அழகு, ஆற்றல், உற்சாகம் அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். பழுதான டி. வி. , ப்ரிட்ஜ், ஓவனை மாற்றுவீர்கள். பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். தொண்டை வலி, தொண்டை புகைச்சலும் அவ்வப்போது வரக்கூடும். மூத்த சகோதரங்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆனால் இளைய சகோதர வகையில் செலவினங்கள் வந்துப் போகும்.
அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
கன்னிப் பெண்களே! வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபத்தை பெருக்குவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் தவறைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்து உதவுவார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள்.
கலைத்துறையினர்களே! வசதி, வாய்ப்புகள் பெருகும். சமயோஜித புத்தியால் சாதிக்கும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 4, 6, 5
அதிஷ்ட எண்கள்: 3, 9
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
அதிஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி