திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 31 ஜூலை 2017 (17:44 IST)

ஆகஸ்டு மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி தங்கும். திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் ஆதாயம் உண்டு.


 


வேற்றுமொழி பேசுபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அவ்வப்போது கை, கால் வலி, சோர்வு, களைப்பு வரும். சிலருக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், கால்சியக் குறைவு வரக்கூடும். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். அவர்களுடன் கருத்து மோதல்களும் வரும். 
 
அரசு காரியங்கள் தாமதமாக முடியும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆனால் எதிர்ப்புகள், எதிர்மறை எண்ணம், தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். மாதத்தின் மையப்பகுதி முதல் வீடு, மனை, சொத்துப் பிரச்னைகள் நல்ல விதத்தில் முடியும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மனைவிவழி சொத்துகள் வந்து சேரும். நண்பர், உறவினர்களுடன் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. பழைய நண்பர்களுடன் பகைமை வரக்கூடும். 
 
அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம். 
 
கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் லாபத்தை பெருக்க புது விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலக சூட்சுமங்கள் அத்துபடியாகும். சக ஊழியர்கள் ஆச்சர்யப்படுமளவிற்கு சில காரியங்களை பரபரப்புடன் செய்து முடிப்பீர்கள். 
 
கலைத்துறையினர்களே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். புதிய அணுகுமுறையால் முன்னேறும் மாதமிது. 
            
அதிஷ்ட தேதிகள்: 2, 6, 16
அதிஷ்ட எண்கள்: 4, 9
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தாபச்சை, மயில்நீலம்
அதிஷ்ட கிழமைகள்: புதன், சனி