வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (09:43 IST)

ஆகஸ்ட் 2021 - 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
 
எதையும் சுலபமாக புரிந்த கொள்ளக் கூடிய மூன்றாம் எண் அன்பர்களே, நீங்கள் பதட்ட குணத்தை கைவிடுவது முன்னேற்றத்துக்கு உதவும். இந்த மாதம் ஏதாவது ஒருவகையில் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாதாரணமாக பேசப்போக அது சண்டையாக மாறலாம் கவனம் தேவை.  வேளை தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். பொருட்களை  கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்புவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக அலைய வேண்டி இருக்கும். 

குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வி பற்றிய வீண்பயம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.
 
பரிகாரம்: சுந்தரகாண்டம் படித்து பெருமாளை வணங்கி வர சகல நன்மை களும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.