1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Updated : சனி, 1 செப்டம்பர் 2018 (14:12 IST)

செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:



புத்திகூர்மை கொண்ட ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம்எடுத்த காரியங்களில் இருந்து வந்த  தடை தாமதம் நீங்கும். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம். பொருள்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். குடும்பத்தில்  நிம்மதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த மனம் வருந்தும்படியான நிலை மாறும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும்.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. புதிய பொறுப்புகள் சுமையாக வரும். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம்.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வீண்கவலை இருக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக ஆலோசனை நடத்தவும்.

அரசியல்துறையினருக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. 

மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

பரிகாரம்: பெருமாளுக்கு துளசி சமர்ப்பித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். தொழில் போட்டிகள் குறையும்.