ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: வியாழன், 31 மே 2018 (19:39 IST)

ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
மனதிற்கு முக்கியத்துவம் அளித்து வாழ்க்கையில் பரிணமிக்கும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் விரும்பாத இடமாற்றம்  உண்டாகலாம்.



குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். தொழில், வியாபாரத்தில்  எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும்.

புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும்.  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பெண்களுக்கு அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக  அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.