திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: சனி, 29 டிசம்பர் 2018 (17:19 IST)

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நிதானமான  அணகுமுறையால் அனைவரையும் வசீகரிக்கும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் செயல் திறமையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களது திறமைகளுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். உங்கள் திறமை அதிகரிக்கும்.

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிறச்சனைகள் உங்களுக்கு சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும்.

மன கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் விலகும். அரசியல்துறையினருக்கு மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.

பரிகாரம்: ஸ்ரீமகா கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.