Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

Numerology
Last Updated: திங்கள், 2 ஏப்ரல் 2018 (18:54 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவ நீங்கள் இந்த மாதம் எங்குச் சென்றாலும் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். 

 
வீட்டில் இருப்பவர்களும் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். புது வேலைக் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பழைய வாகனத்தை விற்று புதுசு வாங்குவீர்கள். வேற்றுமொழிப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களாலும் உதவிகள் கிடைக்கும். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். 
 
ஓரளவு பணப்புழக்கம் இருக்கும் என்றாலும் பழைய கடனை நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள். திடீர் திடீரென்று ஒருவித மனோபயம் வந்துப் போகும். வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் விஸ்வரூபமெடுக்கும். எதுவாக இருந்தாலும் பேசி தீர்ப்பது நல்லது. சகோதரங்களுடன் அவ்வப்போது மனவருத்தம் வந்துப் போகும். 
 
அரசியல்வாதிகளே! பொது விழாக்களுக்கு தலைமைத் தாங்குவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! ஆடை, ஆபரணம் சேரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். சொந்த கடை வாங்க முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிப் பெறுவீர்கள். 
 
கலைத்துறையினர்களே! உங்களின் கடுமையான உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பழைய பிரச்னைகள் தீரும் மாதமிது.              
 
அதிஷ்ட தேதிகள்: 9, 1, 3, 12, 27
அதிஷ்ட எண்கள்: 6, 8
அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, கிரே
அதிஷ்ட கிழமைகள்: வியாழன், சனி


இதில் மேலும் படிக்கவும் :