Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருஞ்சீரகம்

கருஞ்சீரகம் சுக்கு - தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் சைனஸ் தொல்லை தீரும்.
கருஞ்சீரகத்தை பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றில் ஊற வைத்து அரைத்து தினமும் இரண்டு கருஞ்சீரகத்துடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால்  தடைபட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும்.
 
கருஞ்சீரகத்தை தயிர் சேர்த்து அரைத்து உடலில் அரிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால், படை, சொரி, சிரங்கு போன்றவை மறையும்.
 
கருஞ்சீரகத்தை தேங்காய்ப் பால் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். கடைசியாகக் கிடைக்கும் வண்டலை, தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சி தைலமாக்கி  புண்கள் மீது தடவினால் அவை உடனே ஆறும்.
 
கருஞ்சீரகத்தை நெல்லிக்காய்ச் சாற்றில் ஊறவைத்துக் காயவைத்து பொடி செய்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
 
கருஞ்சீரகத்தை தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுந்நிர் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீர் கல்லைக் கரைத்து சிறிந்நிர் அடப்பை அகற்றும் மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.
 
சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.


இதில் மேலும் படிக்கவும் :