உப்பில் உள்ள அயோடினுக்கும் தைராய்டுக்கும் என்ன தொடர்பு?

ஒரு போதும் வெண்மையான கல்உப்பை சுத்தமானது என்று நினைத்துக் கொண்டு வாங்க வேண்டாம். சாதாரண கோணிப் பைகளில் உள்ள உப்பையே  வாங்குங்கள். நம் தாய்மார்கள், பாட்டிகள், முப்பாட்டிகள் அனைவரும் அதைத்தான் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்தார்கள்.
அயோடின் என்பது ஒரு தாதுப் பொருளாகும். இந்த தாது உப்பு மண்ணிலிருந்து விளையும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் அந்தந்த உணவுப் பொருளின் தன்மைக்கேற்ப கலந்துள்ளது. 
 
தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள ஒரு சுரப்பியாகும். அது சுரக்கும் சுரப்பு நீர் தைராக்ஸின் ஆகும். இந்த தைராக்ஸின் இரத்தத்தில்  கலக்கிறது. இந்த சுரப்பு நீர் உடல் வளர்ச்சிக்கும் இயக்கத்திற்கும் இன்றியமையாததாகும். இந்த சுரப்பு நீர் அதிகமாக சுரந்தால் உடல் உறுப்புகளின் இயக்கம்  அதிகமாகும். தைராய்டு நீர் மிகவும் குறைந்து விட்டாலும், உடல் இயக்கம் குறிப்பாக இருதய இயக்கம் குறைந்து நின்று விடவும் வாய்ப்புண்டு. 
 
நம் இரத்தத்தில் போதுமான அளவு அயோடின் இரந்தால் போதுமான அளவுக்கு தைராய்டு ஹார்மோன் சுரக்கும். அயோடின் அளவு அதிகரித்தால் அதிகளவு  ஹார்மோன் சுரந்து சுரப்பி வீக்கமடைகிறது. பின்னர் கடினமாகவும் மாறுகிறது. தைராய்டு நோய் உள்ளவங்க, இல்லாதவங்க என்று வித்தியாசம் இல்லாமல்  அனைவரும் அயோடின் கலந்த உப்பை சாப்பிடும் போது, அயோடின் உப்பு காரணமாக தைராய்டு ஹார்மோன், ஆரம்பத்தில் அதிகமாகி பின்னர் நாளடைவில்  வெகுவாக குறைந்து விடுகிறது.
 
அயோடின் உப்பையே நீண்டகாலமாக உட்கொண்டு வரும்போது தைராய்டு ஹார்மோன் சுரப்பி நின்று விடுகிறது. குறிப்பாக பெண்களின் குழந்தைகளின் நலமான வாழ்வைப் பாதிக்கும். பெண் குழந்தைகளுக்கு அயோடின் உப்பைக் கொண்டு சமைத்து பறிமாறப்படும் உணவு அவர்கள் பூப்பெய்தும் போது பல சிக்கல்களை ஏற்படுத்தும். பெண்களுக்கு அயோடின் காரணமாக தைராய்டு ஹார்மோன் அதிகமாக சுரக்கும் போது அடிக்கடி மாதப்போக்கு ஏற்படும்.
 
இயற்கையாக விளையும் உப்பானது கல் உப்பே ஆகும். கல்லுப்பு என்ற சோற்றுப்புக்குப் பதிலாக பாறை உப்பு (ROCK SALT) என்ற இந்துப்பை உபயோகப்படுத்தினால் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.


இதில் மேலும் படிக்கவும் :