திங்கள், 4 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முதுகெலும்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட காரணம் என்ன...?

முதுகெலும்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் பெரும்பான்மையான இளம்வயது மக்கள் அலுவலகங்களிலோ அல்லது வீட்டிலோ அமர்ந்த நிலையில்  8 முதல் 10 மணி நேரம் அமர்ந்துகொண்டே பணிபுரிவதால் அவர்களுக்கு முதுகெலும்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது. 
 

ஆரம்பத்தில் இல்லையென்றாலும் காலங்கள் செல்ல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக 50 வயதிற்கு மேல் அவர்களுக்கு முதுகு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதேபோல் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே பணிபுரிவதால் மூட்டு சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படுகிறது இதற்கு தீர்வு காண்பது அவசியம்.
 
முதுகுவலி என்பது நோயல்ல. முதுகு வலிக்கு பல காரணங்கள் உண்டு. முதுகுப் பகுதியைச் சார்ந்த தசைகள், எலும்புகள், தசைநாண்களில் ஏற்படுகிற  பிரச்சினைகள் இதற்கு முக்கிய காரணம்.
 
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு முதலில் முதுகில் வலி ஏற்பட்டு பின்னர் வயிற்று வலி ஏற்படும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பையில் கல் உள்ளவர்களுக்குக் முதுகில் வலி ஆரம்பித்து, முன் வயிற்றுக்குச் செல்லும்.
 
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள். ஒரே நிலையில் நீண்ட நேரம் படிப்பது அமர்வது என பல காரணங்களால் முதுகுவலி ஏற்படுகிறது.
 
உடலின் எடையைத் தாங்குவதே இந்த மூட்டுகள் தான். மூட்டுகள் என்பது எலும்புகள், குருத்தெலும்புகள், தசை நாண்கள் முதலானவற்றை உள்ளடக்கியது. இவற்றை நம் உடலோடு சேர்த்து உறுதியாக பிடித்துக்கொள்ள கொலாஜன் என்னும் புரதம் உண்டு.
 
உடல் பருமன் மூட்டுவலிக்கான மிக முக்கியமான காரணமாக உள்ளது அதிக பளு தூக்குதல் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம், ஹார்மோன் மாற்றங்கள்,  மன அழுத்தம், சீரற்ற மனநிலை, போதைப்பழக்கம், சில நேரங்களில் பரம்பரை ரீதியாகவும் இந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
 
ஒரே இடத்தில் அதிகமான அழுத்தம் தருவது மூட்டு வலிக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. கொலாஜன் உற்பத்தியில் குறையில்லாமல் இருக்கும் வரை மூட்டுவலி என்பதோ பிரச்சினை என்பதோ நமக்கு வரவே வராது. சரியான உடற்பயிற்சி இல்லாதது. அதிகமான உணவு உண்ணுதல் மோசமான விளைவை  ஏற்படுத்தும்.