திங்கள், 22 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

எதற்கெல்லாம் பயன்படுகிறது சீமை அகத்தி இலை தெரியுமா...!

சீமை அகத்தி இலைகள் மருத்துவ பலன்களும் தரவல்ல செடியாக குறுமரமாகத் திகழ்கிறது, சீமை அகத்தி. இதன் இலை, மலர்கள், காய் மற்றும்  மரப்பட்டைகள், உடல் நல பாதிப்பைத் தீர்க்கும் மூலிகை மருந்துகளில் பயன்படுகின்றன.
முகம் கறுத்து, சருமம் வறண்டு போகும். இதனால், முகம் பொலிவிழந்து சோகமாகக் காணப்படுவார்கள். இந்த பாதிப்பை சரி செய்ய, அவர்கள் இரவு  உறங்குமுன், சீமை அகத்தி இலைகளை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து நன்கு அரைத்து, முகத்தில் இதமாக பூசிவிட்டு, காலையில் எழுந்தவுடன் மிருதுவாக  முகத்தை நீரில் அலசி வர, வறண்ட சருமம் கொண்ட முகம், மிருதுவாகி, மீண்டும் பொலிவாகும். முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள், சிறிய பூனை முடிகள்  நீங்கி, முகம் வனப்புடன் விளங்கும்.
 
சீமை அகத்தியை, உடலுக்கு உட்கொள்ளும் மருந்துகள் மூலம் மட்டுமன்றி, உடலுக்கு அழகு தரும் வெளிப்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள். இந்த படர் தாமரை பாதிப்பை சரி செய்ய, பசுமையான சீமை அகத்தி இலைகளை நன்கு மையாக அரைத்து, அதில் சிறிது தேங்காயெண்ணை சேர்த்து, தினமும் இருவேளை படர் தாமரை உள்ள இடங்களில் தடவி வர, விரைவில் பாதிப்புகள் நீங்கி, உடல் சருமம் இயல்பாகும்.
சீமை அகத்திக் கீரை, பூஞ்சைத் தொற்று மற்றும் வியாதி எதிர்ப்புத் தன்மையில் சிறந்த ஆற்றலைப் பெற்றுள்ளது. உடலில் வியர்வை தோன்றும் இடங்களில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றால் சருமத்தில் உண்டாகும் இந்த அடர்ந்த சிவப்பு வண்ண தேமல் போன்ற வடிவம், அரிப்பையும் சொரிந்தால், உடலில் பரவக்கூடிய  தன்மையும் கொண்டது.