புதன், 13 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (10:53 IST)

நெய்யில் உள்ள பல நன்மைகள் என்ன...?

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறலாம்.

நெய்யில் ஆண்டி-ஆக்ஸிடென்ட்கள் மற்றும் கொழுப்பைக் கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

நெய்யானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து குறைத்துவிடும். வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் தேய்மானம் எதுவும் ஏற்படாமல், அவைகள் நன்கு செயல்படுவதற்கு உதவும். இதனால் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

நிறைய மக்களுக்கு பால் பொருட்கள் என்றாலே அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பால் பொருட்களின் மூலம் கிடைக்கக்கூடிய சில நன்மைகளானது நெய்யின் மூலம் கிடைக்கும்.

பெரும்பாலானோர் நெஞ்செரிச்சலால் அவதிப்படுவர். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் இதற்கு உள்ளாவார்கள். ஆகவே இப்படி நெஞ்செரிச்சல் ஏற்படும் போது ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை உணவில் சேர்த்து சாப்பிட்டால், நெஞ்செரிச்சல் உடனே தணியும்.

பொதுவாக பலர் நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த உணவு. ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.