வாழைத்தண்டை சாறாக உணவில் தொடர்ந்து எடுத்துக்கொள்வதால் என்ன நன்மைகள்...?
வாழைத்தண்டு சாறினை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால், விரைவில் சிறுநீரகக் கற்கள் கரைந்து சிறுநீரின் வழியே வெளியேறிவிடும்.
சிலர் வாழைத்தண்டு சாறில் துவர்ப்பு அதிகம் இருப்பதால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்வார்கள். அதோடு இரண்டு பச்சை ஏலக்காயை தட்டிப் போட்டுக் குடிக்கும்போது கற்கள் உள்ளிருக்கும்போதும், வெளியேறும்போது ஏற்படுகின்ற வலி கட்டுப்படும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வாழைத்தண்டு சாறு குடிக்கலாம். வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், வாழைத்தண்டு சாறு குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும்.
வாழைத்தண்டில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது கொழுப்பைக் குறைக்கும், குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்பை வேகமாகக் கரைக்கும். வாழைத்தண்டுடன் இஞ்சி சாறினை சேர்த்து வாரம் இரண்டு முறை குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
வாழைத்தண்டு சாறில் லெமன் ஜூஸ் சேர்த்து குடித்து வந்தால், வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் மற்றும் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் இரண்டும் சேர்ந்து, பொட்டாசியம் சிட்ரேட்டாக மாறி கிட்னியில் கற்கள் உருவாகாமல் பாதுகாக்கும்.
வாழைத்தண்டை சமைத்து அல்லது சாறாக உணவில் தொடர்ந்து ஏதேனும் ஒரு வடிவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகள் வெளியேறும். உடல் புத்துணர்ச்சியாகவும், லேசாகவும் மாறிவிடும்.