வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தூதுவளையை உணவில் சேர்த்து கொள்வதால் உண்டாகும் பயன்கள்....!!

தூதுவளை கொண்டு ரசம் தயாரித்து, நோய் தாக்கம் ஏற்பட்டவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சிரைப்பு போன்ற பல்வேறு  பிரச்சனைகளிலிருந்து எளிதாக குணம் அடைய முடியும். 

சளி மட்டுமில்லை காய்ச்சலுக்கும் தூதுவளை சிறந்த மருந்து தான். மேலும் உடல் வலிமை அடையும். தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூளையில் உள்ள செல்கள் வலிமை அடையும். இதனால் மூப்பு அடைந்த காலத்திலும் நினைவாற்றல் குன்றாமல் இருக்கும். 
 
குழந்தைகளுக்குத் தொடர்ந்து தூதுவளையை உணவில் சேர்த்து வர, அவர்களின் நினைவுத்திறன் அதிகமாகிப் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இரத்தத்திலுள்ள  சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சரியான அளவில் இருக்க வேண்டும். 
 
குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைப் பேறு பெற்ற பெண்களுக்கு இரத்த அணுக்களின் அளவு மிகவும் அவசியமானது. இந்த எண்ணிக்கை குறைந்தால் அவர்களுக்கு இரத்த சோகை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த இரத்த சோகை பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள தூதுவளை உதவுகிறது. 
 
தூதுவளை இலைகளைப் பறித்து, சுத்தம் செய்து, காயவைத்து, பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும் இதனைத் தொடர்ந்து மோரில் கலந்து சாப்பிட்டு வர இரத்த  சிவப்பு அணுக்கள் விருத்தி அடைந்து, இரத்த சோகை நோய் தீர்ந்துவிடும்.
 
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகளவு காணப்படுகின்றது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்களின் எலும்புகள் மற்றும் பற்கள் பலமடையும். பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி போன்ற தொல்லைகள் நீங்கும்.
 
இந்த தூதுவளை சர்க்கரை நோய்க்குச் சிறந்த மருந்து பொருளாக உள்ளது. இந்த தலை சற்று கசப்பு தன்மை கொண்டதாக இருக்கும்.இதனைச் சாப்பிட்டவுடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரத் தொடங்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த இலையைப் பொடி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும்  பொழுது நல்ல பலனை அடைய முடியும்.