வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தலைமுடி நன்கு வளர வீட்டிலே செய்திடலாம் மூலிகை (ஹெர்பல்) எண்ணெய்!!!

தலைமுடி நன்கு வளர வீட்டிலே செய்திடலாம் மூலிகை (ஹெர்பல்) எண்ணெய்!!!

முடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான முடி தற்போது பலருக்கு கிடையாது, ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால், உடலுக்கே போதிய சக்துக்கள் கிடைக்காத நிலையில், முடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும். 


 


அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால், முடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியனால் உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கிவிடுகிறது.
 
சிலருக்கு இளமையிலேயே நரை முடியானது வர ஆரம்பிக்கிறது. அதற்கு பரம்பரை அல்லது ஊட்டச்சத்தின்மை தான் காரணமாக இருக்கும். எனவே கூந்தலின் நிறம் மாறாமல் கருமையாக இருப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான உணவுகளையும், கூந்தலுக்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும். அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்பதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முடியை பராமரித்து, கருமையான முடியை நிலைக்க வைக்கலாம்.
 
தலைமுடி பிரச்சனைக்கு ஹெர்பல் எண்ணெயை வீட்டிலேயே தயாரிக்கலாம். சிலருக்கு எந்த எண்ணெய் தேய்த்தாலும் முடி கொட்டும். முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இந்த ஹெர்பல் எண்ணெயை தினமும் தடவி வந்தால் விரைவில் கூந்தல் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து முடி நன்கு அடர்த்தியாகவும், நீண்டும் வளரும். இந்த எண்ணெயை தினமும் தடவி வந்தால் விரைவில் கூந்தல் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். 
 
ஹெர்பல் எண்ணெய் தயாரிக்கும் முறை: 
 
தேங்காய் எண்ணெய் - 50 கிராம் 
ஆலிவ் எண்ணெய் - 50 கிராம் 
பாதாம் எண்ணெய் - 50 கிராம் 
வைட்டமின் எண்ணெய் - 50 கிராம் 
கடுகு எண்ணெய் - 50 கிராம் 
நல்லெண்ணெய் - 50 கிராம் 
கரிசலாங்கண்ணித் தைலம் - 50 கிராம் 
பொன்னாங்கன்னித் தைலம் - 50 கிராம் 
மருதாணித் தைலம் - 50 கிராம் 
வேம்பாலம் பட்டை - 50 கிராம் 
சூரியகாந்தி எண்ணெய் - 50 கிராம் 
 
இந்த கலவைகளை நன்கு கலந்து, மிதமாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய் அவ்வப் போது தேய்த்து வந்தால் தலைமுடி ஆரோக்கியமாக வளர உதவும். இதில் சில குறிப்பிட்ட பொருட்கள் நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாக கிடைக்கும்.