செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வேர்க்கடலையில் உள்ள வைட்டமின்களும் அதன் பயன்களும்...!!

மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.

எல்லாவிதமான இரத்தப் போக்குகளையும் இது தடுக்கும். பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வேர்க்கடலையாகும்.
 
உடல் பருமன் உள்ளவர்கள் உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த  வேர்க்கடலையைச் சாப்பிடவும்.
 
இத்துடன் சர்க்கரை சோக்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது.  இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.
 
வயிற்றுப்போக்கு உடனே கட்டுப்படவும், பற்கள் பலம் பெறவும் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது உடல் அழகும், இதயப் பாதுகாப்பும். வேர்க்கடலையில் உள்ள நியாஸின் தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும், இவை வராமல் முன்கூட்டியே தடுக்கிறது.
 
எந்த வயதினரும் தினமும் அதிகபட்சம் 50 கிராம் வரை சாப்பிட்டால், செயலாற்றல் மிக்க மருந்தாக வேர்க்கடலை செயல்படும்.
 
வேர்க்கடலையை அளவோடு சாப்பிடுவது அவசியம். அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள் வரும். மேக நோய் இருந்தால் அது வீரியப்படும்.  நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும்.
 
கல்லீரல் கோளாறு, மஞ்சள்காமாலை நோய் முதலியவை இருந்தால் நோய் குணமாக வேர்க்கடலை சாப்பிட வேண்டும். நீரிழிவு உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் தொந்தரவு உள்ளவர்கள் நெருங்கக்கூடாத பொருள் இந்த வேர்க்கடலையாகும்.